எலுமிச்சம் பழ சாதம் / Lemon Rice

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com  Lemon Rice

தேவையான பொருட்கள்

எலுமிச்சை                -      2 (நடுத்தரமானது)

மஞ்சள் தூள்                 -        3

வத்தல் மிளகாய்            -         3

கடுகு                            -      ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு             -      ஒரு ஸ்பூன்

கடலைப் பருப்பு               -     2 ஸ்பூன்

முந்திரி பருப்பு              -      3

பச்சை மிளகாய்              -      3

உப்பு                            -    தேவைக்கேற்ப

எண்ணெய்                    -    100 மிலி

சாதம்                          -    வேக வைத்தது.

செய்முறை

 *சாதத்தை நன்கு விரைப்பாக வடித்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து விதை நீக்கிஅத்துடன்  கப் தண்ணீர் ஊற்றிமஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். 

*அலுமினியப் பாத்திரத்தில் எண்ணெயை நன்கு சுட வைத்துகடுகுஉளுத்தம் பருப்புகடலைப் பருப்புகாய்ந்த மிளகாய் (இரண்டாகக் கிள்ளியது) போட்டுபின் முந்திரிப் பருப்பையும் போட்டு எல்லாம் சிவந்ததும்நீளமாக வகுந்த பச்சை மிளகாய்கறி வேப்பிலையையும் போடவும். 

*எலுமிச்சம் பழஞ்சாற்றை அதில் ஊற்றி கொதித்து சற்று சேர்ந்தாற்போல் வந்ததும்தூள் உப்பு சேர்த்துக் கலக்கி விட்டு இறக்கிவடித்து ஆறிய சாதத்தில் ஊற்றிக் கிளறவும். 

 

குறிப்பு: பச்சை மிளகாயின் காம்பினைக் கிள்ளிவிட்டு காற்று புகாத பாலிதின் பைகளில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு பசுமை மாறாமல் இருக்கும்.

 

 

 

 

.